மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடனும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும் கழகப் பொதுச்செயலாளருமான திரு. N. ஆனந்த் அவர்களின் ஆலோசனையின்படியும்,
திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதா IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. விஜயகுமார் B.Sc., B.L., MLA, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. G. பாலமுருகன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு. பிரகாசம், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. M.L. பிரபு, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அருண்குமார், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. M.S. ரவி மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சி, பொதுமக்கள் நலன் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர்.
மக்கள் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் இக்கூட்டத்தில் பகிரப்பட்டன.
🚩 தமிழக வெற்றி கழகம்