திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உடன் இருந்தார்.
முதலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக புகார் எழுந்த ஏ.ஆர்.எஸ். தனியார் இரும்பு உருக்காலை மற்றும் தாமரை ஏரி பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்தார்.
விதிமீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மரக்கன்றுகள் வளர்த்து வரும் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டினார்.
அவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் ஸ்டீல் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
பசுமையை பாதுகாக்கும் உறுதிமொழியும் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
ஆய்வின்போது மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கஜலட்சுமி, சிப்காட் தொழிற்பேட்டை திட்ட இயக்குநர் சரவணன் மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.