பொன்னேரி அருகே மறுசுழற்சி முறையில் பேட்டரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திறப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மாதவராயன்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள மறுசுழற்சி முறையில் பேட்டரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது. பேட்டரி கழிவுகளை மறுசுழற்சி செய்து புதிய பேட்டரிகளை தயாரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ். விஜயகுமார் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் தொழிற்சாலை நிர்வாகிகள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த முயற்சி அமையும் என விழாவில் தெரிவிக்கப்பட்டது.