மாதர்பாக்கம் ஊராட்சியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்

மாதர்பாக்கம் ஊராட்சியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான தளபதி திரு. விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் திரு. S. விஜயகுமார் B.Sc., B.L., MLA அவர்களின் தலைமையிலும்,

தமிழக வெற்றிக் கழகம் – கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக, 28.05.2026 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு “அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும், பட்டினி இல்லா சமுதாயம் உருவாக வேண்டும்” என்ற உயரிய நோக்கில், மாதர்பாக்கம் ஊராட்சியில் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாதர்பாக்கம் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பசியற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த மனிதநேயப் பணிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகம்
மக்கள் சேவையே மகேசன் சேவை

30 May 2026