எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் கல்பட்டு கிளை சார்பில் மகளிர் தினம் கொண்டாட்டம் – பொதுமக்களுக்கு இனிப்பு, விசில் வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பட்டு கிளை சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஒன்றிய பொறுப்பாளர்களின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், கழகத்தின் வெற்றி சின்னமான விசில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மகளிர் முன்னேற்றம், சமூக ஒற்றுமை மற்றும் மக்கள் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வு பொதுமக்களின் வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றதாக கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

08 Mar 2026